இங்கிலாந்து மகளிர் அணி ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அதன்படி நடப்பு மகளிர் ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் இவ்விரு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டியை கொண்ட தொடரிலும் விளையாடவுள்ளது.

Advertisement

இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் ஜனவரி 12ஆம் தேதி தொடங்கவுள்ளது. அதன்பின் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஜனவரி 20ஆம் தேதியும், டெஸ்ட் தொடரானது ஜனவரி 30ஆம் தேதியும் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான இங்கிலாந்து மகளிர் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. ஹீதர் நைட் தலைமையிலான இந்த அணியில் ஆல்-ரவுண்டர் ஃப்ரேயா கெம்ப் மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சாளர் லின்ஸி ஸ்மித் ஆகிய அறிமுக வீராங்கனைகள் இங்கிலாந்து மகளிர் டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Advertisement

இந்நிலையில் மகளிர் ஆஷஸ் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அலிச ஹீலி தலைமையிலான இந்த அணியில் நட்சத்திர ஆல் ரவுண்டர் சோஃபி மோலினக்ஸ் காயம் காரணமாக இடம்பிடிக்கவில்லை. அதேசமயம் இந்திய அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஜார்ஜியோ வோல் மீண்டும் தனது இடத்தை உறுதிசெய்துள்ளார். 

மேற்கொண்டு ஆஷ்லே கார்ட்னர், போஃப் லிட்ச்ஃபீல்ட், தஹ்லியா மெக்ராத், பெத் மூனி, எல்லிஸ் பெர்ரி, மேகன் ஷாட் உள்ளிட்ட நட்சத்திர வீராங்கனைகள் தங்கள் இடங்களைத் தக்கவைத்துள்ளனர். இதுதவிர்த்து இதில் டி20 அணிக்கான ஆஸ்திரேலிய அணியில் கிரேஸ் ஹேரிஸும் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய மகளிர் அணி கூடிய விரையில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

ஆஸ்திரேலிய மகளிர் ஒருநாள் & டி20 அணி: அலிசா ஹீலி (கேப்டன்), டார்சி பிரௌன், ஆஷ்லே கார்ட்னர், கிம் கார்த், கிரேஸ் ஹாரிஸ் (டி20ஐ மட்டும்), அலனா கிங், ஃபோப் லிட்ச்ஃபீல்ட், தஹ்லியா மெக்ராத், பெத் மூனி, எல்லிஸ் பெர்ரி, மேகன் ஷாட், அன்னாபெல் சதர்லேண்ட், ஜார்ஜியா வோல், ஜார்ஜியா வேர்ஹாம்

 இங்கிலாந்து ஒருநாள் அணி: ஹீதர் நைட் (கே), டாமி பியூமண்ட், லாரன் பெல், மையா பௌச்சர், ஆலிஸ் கேப்ஸி, கேட் கிராஸ், சார்லி டீன், சோபியா டங்க்லி, சோஃபி எக்லெஸ்டோன், லாரன் ஃபைலர், சாரா க்ளென், ஏமி ஜோன்ஸ், நாட் ஸ்கைவர்-பிரண்ட், டேனியல் வையட்-ஹாட்ஜ்

Advertisement

இங்கிலாந்து டி20 அணி: ஹீதர் நைட் (கே), லாரன் பெல், மையா பௌச்சர், ஆலிஸ் கேப்ஸி, சார்லி டீன், சோபியா டங்க்லி, சோஃபி எக்லெஸ்டோன், லாரன் ஃபைலர், டேனியல் கிப்சன், சாரா க்ளென், பெஸ் ஹீத், ஏமி ஜோன்ஸ், ஃப்ரேயா கெம்ப், லின்ஸி ஸ்மித், நாட் ஸ்கைவர்-பிரண்ட், டேனியல் வையட்-ஹாட்ஜ்.

இங்கிலாந்து டெஸ்ட் அணி: ஹீதர் நைட் (கே), டாமி பியூமண்ட், லாரன் பெல், மையா பௌச்சர், கேட் கிராஸ், சார்லி டீன், சோபியா டங்க்லி, சோஃபி எக்லெஸ்டோன், லாரன் ஃபைலர், பெஸ் ஹீத், ஆமி ஜோன்ஸ், ரியானா மெக்டொனால்ட்-கே, நாட் ஸ்கைவர்-பிரண்ட், டேனியல் வையட்-ஹாட்ஜ்

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News