இங்கிலாந்து மகளிர் அணி ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற் நிலையில், இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியது. 

Advertisement

இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி இன்று ஹோபர்டில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய மகளிர் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் போப் லிட்ச்ஃபீல்ட் மற்றும் கேப்டன் அலிசா ஹீலி ஆகியோர் தலா 15 ரன்களிலும், எல்லிஸ் பேர்ரி 2 ரன்னிலும், அனபெல் சதர்லேண்ட் 10 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் ஆஸ்திரேலிய மகளிர் அணி 54 ரன்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த பெத் மூனி - ஆஷ்லே கார்ட்னர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

Advertisement

இதில் இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் பெத் மூனி 50 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த தஹ்லியா மெக்ராதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார். இதற்கிடையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஆஷ்லே கார்ட்னர் சதமடித்து அசத்தினார். பின்னர் 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 102 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆஷ்லே கார்ட்னரும், 8 பவுண்டரிகளுடன் 55 ரன்களைச் சேர்த்த நிலையில் தஹ்லியா மெக்ராத்தும் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

இறுதியில் ஜார்ஜியா வர்ஹேம் அதிரடியாக விளையாடி 38 ரன்களைச் சேர்க்க, ஆஸ்திரேலிய மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்களைச் சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் லாரன் பெல், நாட் ஸ்கைவர் பிரண்ட், சார்லீ டீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய மையா பௌச்சர் ரன்கள் ஏதுமின்றியும், கேப்டன் ஹீதர் நைட் 4 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் இணைந்த டாமி பியூமண்ட்- நாட் ஸ்கைவர் பிரண்ட் இணை சிறப்பாக விளையாடி அணியின் சரிவிலிருந்து மீட்டனர். 

இதில் இருவரும் அரைசதம் கடந்து அசத்திய நிலையில் டாமி பியூமண்ட் 54 ரன்களுக்கும், நாட் ஸ்கைவர் பிரண்ட் 61 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். இதனையடுத்து இணைந்த டேனியல் வைட் - ஏமி ஜோன்ஸ் இருவரும் ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டேனியல் வைட் 35 ரன்களுக்கும், ஏமி ஜோன்ஸ் 30 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகளும் சோபிக்க தவறினர். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இதனால் இங்கிலாந்து மகளிர் அணி 42.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 222 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்த அலனா கிங் 5 விக்கெட்டுகளையும், மேகன் ஷாட் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினர். இதன்மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News