மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் எட்டாவது சீசன் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில்,  இன்று நடைபெறும் அரையிறுதிச் சுற்றில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் நாளை மோதுகின்றன. ஞாயிறன்று இறுதிச்சுற்று நடைபெறுகிறது. 

Advertisement

இந்நிலையில் அரையிறுதி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்திய அணி  பின்னடைவைச் சந்தித்துள்ளது . காயம் காரணமாக ஆல்ரவுண்டர் பூஜா வஸ்தரகர் உலகக் கோப்பைப் போட்டியின் மீதி ஆட்டங்களில் இருந்து விலகியுள்ளார். திங்கள் அன்று கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர், பூஜா ஆகிய இருவருக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. 

Advertisement

இரு நாள்களாகக் காய்ச்சலில் ஹர்மன்ப்ரீத் கெளர் அவதிப்படுவதால் இன்றைய ஆட்டத்தில் அவர் விளையாடுவது சந்தேகம் எனத் தெரிகிறது. இதனால் ஹர்மன்ப்ரீத் கெளருக்குப் பதிலாக ஹர்லீன் தியோல் இந்திய அணியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  அதேசமயம் டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து பூஜா விலகியுள்ளதால் அவருக்குப் பதிலாக ஸ்னே ராணா இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News