மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 16ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - யுபி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

இதையடுத்து களமிறங்கிய யுபி வாரியர்ஸ் அணிக்கு கிரேஸ் ஹாரிச் மற்றும் ஜார்ஜியா வோல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியதுடன் முதல் விக்கெட்டிற்கு 74 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்பின்கிரேஸ் ஹாரிஸ் 3 பவுண்டரி ஒரு சிக்ஸர் உள்பட 28 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கிரன் நவ்கிரே ரன்கள் ஏதுமின்றி நடையைக் கட்ட, மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜார்ஜியா வோல் டபிள்யூபிஎல் தொடரில் தனது முதல் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.

Advertisement

பின் 12 பவுண்டரிகளுடன் 55 ரன்களைச் சேர்த்த நிலையில் ஜார்ஜியா வோல் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் தீப்தி சர்மா நிதானமாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். ஆனால் மறுபக்கம் களமிறங்கிய விருந்தா தினேஷ் 10 ரன்களுக்கும், சினெல்லே ஹென்றி 6 ரன்னிலும், ஸ்வேதா செஹ்ராவத் ரன்கள் ஏதுமின்றியும், உமா சேத்ரி ஒரு ரன்னிலும் என நடையைக் கட்டினர். அதன்பின் 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேப்டன் தீப்தி சர்மா தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சோஃபி எக்லெஸ்டோன் 16 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இன்னிங்ஸின் கடைசி பந்தில் விக்கெட்டை இழந்தார்.

இதன்மூலம் யுபி வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களைச் சேர்த்தது. மும்பை இந்தியன்ஸ் தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அமெலியா கெர் 5 விக்கெட்டுகளையும், ஹீலி மேத்யூஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹீலி மற்றும் அமெலியா கெர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஹீலி மேத்யூஸ் அதிரடியாக விளையாடிய நிலையில், மற்றொரு தொடக்க வீராங்கனை அமெலியா கெர் 10 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 

அவரைத்தொடர்ந்து மேத்யூஸுடன் இணைந்த நாட் ஸ்கைவர் பிரண்ட்டும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹீலி மேத்யூஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தும் அசத்தினார். இதன்மூலம் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நாக் ஸ்கைவர் 7 பவுண்டரிகளுடன் 37 ரன்னில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ஹீலி மேத்யூஸும் 8 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 68 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த அமன்ஜோத் கவுர் மற்றும் யஷ்திகா பாண்டியா இணை அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி 18.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News