ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நடப்பு உலகக் கோப்பை தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் அவர்களை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.

Advertisement

இந்த போட்டியின் போது 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி வெகு விரைவாக வெற்றி கோட்டினை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இஷான் கிஷன், ரோஹித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயர் என அடுத்தடுத்து மூன்று வீரர்கள் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர்.

Advertisement

இதன்காரணமாக இந்திய அணி 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின்னர் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த கே.எல் ராகுல் அற்புதமாக இன்னிங்சை கட்டமைத்தார். அவர்கள் இருவரும் மூன்றாவது விக்கெட்க்கு 165 ரன்கள் சேர்க்கவே இந்திய அணி வெற்றியை நோக்கி எளிதாக சென்றது.

குறிப்பாக விராட் கோலி 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து இருந்தாலும் கே.எல் ராகுல் 97 ரன்கள் குவித்து இறுதிவரை களத்தில் நின்று இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றிருந்தார். இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோலி விளையாடிய விதம் வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீர் பாராட்டியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “வளர்ந்து வரும் இளம் வீரர்கள் விராட் கோலியின் ஃபிட்னஸை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். இன்றளவும் விராட் கோலி விக்கெட்டுகளுக்கு இடையில் ரன்களை எவ்வளவு வேகமாக ஓடி எடுக்கிறார் என்று பாருங்கள். அதோடு டாட் பால்களை குறைத்துக் கொண்டு தொடர்ச்சியாக ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்து பவுலர்களின் மீது அவர் அழுத்தத்தை கொடுக்கிறார். அவரை போன்று ரிஸ்க் இல்லாமல் டாட் பாலை குறைத்துக் கொண்டு ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்வதை இளம் வீரர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News