ஆஃப்கானிஸ்தான் அணியானது தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணியானது வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கண்க்கில் டி20 தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.  இதையடுத்து ஜிம்பாப்வே மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று ஹராரேவில் உள்ள ஸ்போர்ட்ஸ் கிளப் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி மதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ஜிம்பாப்வே அணியை பந்துவீச அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஃப்கனிஸ்தான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் செதிகுல்லா அடல் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் 11 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ரஹ்மனுல்லா குர்பாஸ் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஸுபைத் அக்பாரியும் ஒரு ரன்னுடன் நடையைக் கட்டினார். அவர்களைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் செதிகுல்லா அடலும் 18 ரன்களுடன் பெவிலியனுக்கு திரும்பினார். 

Advertisement

இதனால் ஆஃப்கானிஸ்தான அணி 33 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், ஜோடி சேர்ந்த தார்விஷ் ரசூலி - அஸ்மதுல்லா ஒமர்ஸாய் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் இணைந்து 4ஆவது விக்கெட்டிற்கு 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 28 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய முகமது நபியும் 4 ரன்களுடன் நடையைக் கட்டினார். அதேசமயம் மறுபக்கம் பொறுப்புடன் விளையாடி வந்த ரசூலி சர்வாதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தைப் பதிவுசெய்தார். 

பின் 56 ரன்களில் ரசூலி விக்கெட்டை இழக்க, இறுதியில் குலப்தீன் நைப் 26 ரன்களைச் சேர்த்து ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களிச் சேர்த்தது. ஜிம்பாப்வே அணி தரப்பில் டிரேவர் குவண்டு, ரியான் பர்ல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணிக்கு பிரையன் பென்னட் அதிரடியன தொடக்கத்தைக் கொடுத்தார். ஆனால் மறுபக்கம் களமிறங்கிய மருமணி 5 ரன்னிலும், தியான் மேயர்ஸ், வெஸ்லி மதவெரே ஆகியோர் தலா 4 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். 

அதன்பின் 27 ரன்னில் பிரையன் பென்னட்டும் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் சிக்கந்தர் ரஸா ஒருபக்கம் அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். ஆனல் மறுமுனையில் விளையாடிய ரியன் பர்ல் 4 ரன்னிலும், தஷிங்கா முசெகிவா 13 ரன்னிலும், வெலிங்டன் மஸகட்ஸா 2 ரன்னிலும், ரிச்சர்ட் ந்ங்கரவா ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் அணியின் கடைசி நம்பிக்கையாக பார்க்கப்பட்ட சிக்கந்தர் ரஸாவும் 35 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இதனால் ஜிம்பாப்வே அணி 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ரஷித் கான் மற்றும் நவீன் உல் ஹக் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், முஜீப் உர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலாம் ஆஃப்கானிஸ்தான் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், இந்த டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்தும் அசத்தியுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News