ஆஃப்கானிஸ்தான் அணியானது தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று வரும் டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன. 

Advertisement

இதையடுத்து ஜிம்பாப்வே மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (டிசம்பர் 14) ஹராரேவில் உள்ள ஸ்போர்ட்ஸ் கிளப் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற் ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு மருமணி - பிரையன் பென்னட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் மருமணி 6 ரன்னில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

Advertisement

அவரைத்தொடர்ந்து 13 ரன்னில் தியான் மேயர்ஸ் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பிரையன் பென்னட்டும் 31 ரன்னில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய வெஸ்லி மதவெரே 21, சிக்கந்தர் ரஸா 6, ஃபராஸ் அக்ரம் 6 என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களில் வெலிங்டன் மஸகட்ஸா 17 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் ஜிம்பாப்வே அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஃப்கான் அணி தரப்பில் ரஷித் கான் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் - செதிகுல்லா அடல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் செதிகுல்லா அடல் 3 ரன்னிலும், அடுத்து களமிறங்கிய ஸுபைத் அக்பாரி 2 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தார்விஷ் ரஸூலி 9 ரன்னிலும், மற்றொரு தொடக்க வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் 15 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். இதனல் ஆஃப்கானிஸ்தன் அணி 44 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. பின்னர் அஸ்மதுல்லா ஒமர்ஸாய் - குல்பதின் நைப் இணை ஜோடி சேர்ந்து ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். 

இருவரும் இணைந்து பொறுப்புடன் விளையாடி 5ஆவது விக்கெட்டிற்கு 48 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். பின் 22 ரன்னில் குல்பதின் நைப் விக்கெட்டை இழக்க, 34 ரன்னில் அஸ்மதுல்லா ஒமர்ஸாயும் ஆட்டமிழந்தார். இறுதியில் முகமது நபி 23 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆஃப்கானிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News