ZIM vs SA, 2nd Test: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் முழுமையாக கைப்பற்றி அசத்தியுள்ளது. 

Advertisement

ஜிம்பாப்வே - தென் ஆப்பிரிக்க அணி அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புலவாயோவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் கேப்டன் வியான் முல்டர் முற்சதம் அடித்ததுடன் 367 ரன்களையும், டேவிட் பெடிங்ஹாம் 82 ரன்களையும், லுவான் ட்ரே பிரிட்டோரிஸ் 78 ரன்களையும் சேர்த்தனர். இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 626 ரன்களைச் சேர்த்தது. ஜிம்பாப்வே தரப்பில் டனகா சிவாங்கா, குண்டாய் மாடிகிமு ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

Advertisement

அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஜிம்பாப்வே அணி தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சீன் வில்லியம்ஸ் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 83 ரன்களைச் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 170 ரன்களை மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க தரப்பில் பிரெனலன் சுப்ராயன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனையடுத்து ஃபலோ ஆன் ஆன ஜிம்பாப்வே அணியானது 456 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ள நிலையில்,இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 51 ரன்களைச் சேர்த்திருந்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை கைடானோ 36 ரன்களுடனும், நிக் வெல்ச் 6 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் கைடானோ 40 ரன்களிலும், நிக் வெல்ச் 55 ரன்னிலும் என் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களில் கேப்டன் கிரெய்க் எர்வின் 49 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதவில் ரன்களைச் சேர்க்க முடியாமல் விக்கெட்டை இழந்தனர். 

Also Read: LIVE Cricket Score

இதன் காரணமாக ஜிம்பாப்வே அணி இரண்டாவது இன்னிங்ஸில் 220 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கார்பின் போஷ் 4 விக்கெட்டுகளையும், செனுரன் முத்துசாமி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றின்ர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 236 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியுள்ளது. இப்போட்டியில் முற்சதம் விளாசிய வியான் முல்டர் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வென்றார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News