Keshav Maharaj: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தென் ஆப்பிரிக்க அணிக்காக 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் சுழற்பந்து வீச்சாளர் எனும் சாதனையை கேஷவ் மஹாராஜ் படைத்துள்ளார். 

Advertisement

ஜிம்பாப்வே- தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் லுவான் ட்ரே பிரிட்டோரியஸ் 153 ரன்களையும், கார்பின் போஷ் 100 ரன்களையும், டெவால்ட் பிரீவிஸ் 51 ரன்களையும் சேர்க்க முதல் இன்னிங்ஸில் 418 ரன்களைச் சேர்த்தது. ஜிம்பாப்வே தரப்பில் டனகா சிவாங்கா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

Advertisement

அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஜிம்பாப்வே அணியில் அனுபவ வீரர் சீன் வில்லியம்ஸ் சதமடித்து அசத்தியதுடன் 137 ரன்களைச் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவற அந்த அணி 251 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானாலும் ஃபாலோ ஆனைத் தவிர்த்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் வியான் முல்டர் 4 விக்கெட்டுகளையும், கோடி யூசுஃப் மற்றும் கேசவ் மஹாராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதனையடுத்து 167 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்து வரும் தென் ஆப்பிரிக்க அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 49 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் டோனி டி ஸோர்ஸி 22 ரன்களுடனும், வியான் முல்டர் 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதையடுத்து 216 ரன்கள் முன்னிலையுடன் தென் ஆப்பிரிக்க அணி இன்றைய தினம் மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

Also Read: LIVE Cricket Score

இந்நிலையில் இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் கேசவ் மஹாராஜ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். அதன்படி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க அணிக்காக 200+ விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் சுழற்பந்துவீச்சாளர் எனும் சாதனையை கேசவ் மஹாராஜ் படைத்துள்ளார். அவர் இதுவரை 59 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 202 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News