ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ளது. சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் இந்தத் தொடர் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், போட்டியை நடத்தும் இந்தியா உள்பட 8 அணிகள் பிரதான சுற்றுக்கு நேரடியாகத் தகுதிபெற்றுவிட்டன. எஞ்சியிருக்கும் 2 இடங்களுக்கான அணிகள் தகுதிச்சுற்று ஆட்டங்கள் மூலம் முடிவு செய்யப்படவுள்ளன.

Advertisement

ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்றுகள் முடிந்துள்ள நிலையில் இன்று முதல் சூப்பர் 6 சுற்றுகள் ஆரம்பமாகிறது. அதன்படி இன்று நடைபெற்ற சூப்பர் 6 சுற்றின் முதல் போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஓமன் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில் கும்பி மற்றும் கேப்டம் கிரேக் எர்வின் இணை தொடக்கம் கொட்த்தனர். இதில் கும்பி 21 ரன்களிலும், கிரேக் எர்வின் 25 ரன்களிலும் என ஆட்டமிழக்க, அடுத்து வந்த மதவேராவும் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த சீன் வில்லியம்ஸ் - சிக்கந்தர் ரஸா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சீன் வில்லியம்ஸ் சதமடித்து அசத்த, மறுமுனையில் சிகந்தர் ரஸா 42 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து  3 சிக்சர், 14 பவுண்டரிகளை விளாசி 142 ரன்களை எடுத்திருந்த சீன் விலியம்ஸும் விக்கெட்டை இழக்க, இறுதியில் ஜோங்வா 43 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் ஜிம்பாப்வே அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 332 ரன்களைச் சேர்த்தது. 

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஓமன் அணியில் தொடக் வீரர் கஷ்யப் பிரஜபதி அதிரடியாக விளையாட, மறுமுனையில் ஜதிந்தர் சிங் 2 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய அகிப் இலியாஸ் 45 ரன்களிலும், ஜீசன் மக்சூத் 37 ரன்களிலும், அயான் கான் 47 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பினை தவறவிட்டார்கள். 

அதேசமயம் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கஷ்யப் பிரஜபதி சதமடித்த கையோடு 103 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, இறுதிவரை போராடிய முகமது நதீம் 30 ரன்களைச் சேர்த்த போதிலும் அந்த அணியால் இலக்கை எட்டமுடியவில்லை. இதனால் 50 ஓவர்கள் முடிவில் ஓமன் அணியால் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 318 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

Advertisement

ஜிம்பாப்வே அணி தரப்பில் டெண்டாய் சதாரா,பிளசிங் முசரபாணி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்மூலம் ஜிம்பாப்வே அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் ஓமன் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியில் வெற்றிக்கு காரணமாக இருந்த சீன் வில்லியம்ஸ் ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.  

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News