முத்தரப்பு டி20 தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
பாகிஸ்தான் அணி தற்சமயம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. தொடரின் முடிவில் பாகிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரானது நவம்பர் 11ஆம் தேதி முதல் தொடங்கி, நவம்பர் 15ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. போட்டிகள் அனைத்தும் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரானது நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடரில் பக்கேற்கும் இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்ததிருந்தது இன்று அறிவித்துள்ளது. அதன்படி இலங்கை ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக சரித் அசலங்கா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த தொடருக்கான இலங்கை அணியில் மதிஷா பதிரானா நீக்கப்பட்டுள்ளார்.
அதேசமயம் இலங்கை ஒருநாள் மற்றும் முத்தரப்பு டி20 தொடர்களுக்கான பாகிஸ்தான் அணி நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. இதில் ஒரு அணியின் கேப்டனாக ஷாஹீன் அஃப்ரிடியும், டி20 அணியின் கேப்டனாக சல்மான் அலி ஆகாவும் தொடர்கின்றனர். மேற்கொண்ட பாபர் ஆசாம், ஃபகர் ஸமன் ஆகியோருக்கும் இந்த அணிகளில் இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் ஜிம்பாப்வே அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கந்தர் ரஸா தலைமையிலான இந்த அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பிளெஸிங் முசரபானி காயம் காரணமாக விலகியுள்ளார். இருப்பினும் பிரையன் பென்னட், ரியான் பார்ல், கிளைவ் மடாண்டே, வெலிங்டன் மாசகட்சா, ரிச்சர்ட் ந்ங்கரவா உள்ளிட்டோர் இந்த அணியில் இடம் பிடித்துள்ளனர்.
ஜிம்பாப்வே டி20 அணி: சிக்கந்தர் ராசா (கேப்டன்), பிரையன் பென்னட், ரியான் பர்ல், கிரேம் க்ரீமர், பிராட்லி எவன்ஸ், கிளைவ் மடாண்டே, டினோடெண்டா மபோசா, வெலிங்டன் மசகட்சா, தடிவானாஷே மருமணி, டோனி முனியோங்கா, தஷிங்கா முசேகிவா, டியான் மியர்ஸ், ரிச்சர்ட் ங்கராவா, நியூமன் நியாம்ஹுரி மற்றும் பிரெண்டன் டெய்லர்
பாகிஸ்தான் டி20 அணி: சல்மான் அலி ஆகா (கேப்டன்), அப்துல் சமத், அப்ரார் அகமது, பாபர் ஆசம், ஃபஹீம் அஷ்ரஃப், ஃபகார் ஜமான், முகமது நவாஸ், முகமது வாசிம் ஜூனியர், முகமது சல்மான் மிர்சா, நசீம் ஷா, சாஹிப்சாதா ஃபர்ஹான், சைம் அயூப், ஷஹீன் ஷா அப்ரிடி, உஸ்மான் கான், உஸ்மான் தாரிக்
Also Read: LIVE Cricket Score
இலங்கை டி20 அணி: சரித் அசலங்கா (கேப்டன்), பதும் நிஷங்க, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, கமில் மிஷார, தசுன் ஷனக, கமிந்து மெண்டிஸ், பானுக ராஜபக்ஷ, ஜனித் லியனகே, வனிந்து ஹசரங்கா, மகேஸ் தீக்ஷன, துஷான் ஹேமந்த, துஷ்மந்த சமீர, நுவான் துஷார, அசித்த ஃபெர்னாண்டோ, ஈஷான் மலிங்க