Advertisement

டி20 உலகக்கோப்பை: ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, முகமது சிராஜ் இடம் உறுதி!

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடவுள்ள இந்திய அணியில் 10 வீரர்கள் இடம்பெறுவது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan April 20, 2024 • 13:40 PM
டி20 உலகக்கோப்பை: ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, முகமது சிராஜ் இடம் உறுதி!
டி20 உலகக்கோப்பை: ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, முகமது சிராஜ் இடம் உறுதி! (Image Source: Google)
Advertisement

இந்தாண்டு ஜூன் மாதம் ஐசிசி நடத்தும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. எப்போதும் இல்லாத அளவின் இந்த முறை டி20 உலகக்கோப்பை தொடர் 20 அணிகளைக் கொண்ட நடத்தப்படவுள்ளது. அதன்படி இந்த அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டதுடன், போட்டி அட்டவணையையும் ஐசிசி சமீபத்தில் அறிவித்திருந்தது. இதனால் இத்தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயராகி வருகின்றன. 

இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணி இம்மாத இறுதியில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நடப்பு ஐபிஎல் தொடரைப் பொறுத்த இந்திய அணியின் வீரர்கள் தேர்வு இருக்கும் என்பதால் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட ஆர்வம் காட்டிவருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்திய அணி தேர்வாளர்கள் பெரும்பாலான ஐபிஎல் போட்டிகளை நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார்கள்.

Trending


இதனால் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் யார் யார் இடம்பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இத்தொடரில் இந்திய அணிக்காக விளையாடும் 10 வீரர்கள்களின் பெயர்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அந்தவகையில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்ப்ரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா ஆகியோரது பெயர்கள் இப்பட்டியலில் உள்ளன. 

 

மேலும் காயத்திலிருந்து மீண்டுள்ள ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் ஆகியோரது பெயர்களும் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். அதேசமயம் நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல், யுஸ்வேந்திர சஹால் ஆகியோரது பெயர்கள் இப்பட்டியலில் இல்லை. இருப்பினும் அவர் நிச்சயம் இப்பட்டியலில் இடம்பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement