ஐபிஎல் தொடரை காட்டிலும் உள்ளூர் போட்டிகள் முக்கியமானவை - தவால் குல்கர்னி!
ஐபிஎல் போட்டிகளைக் காட்டிலும் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவது 100 சதவிகிதம் முக்கியத்துவம் வாய்ந்தது என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் தவால் குல்கர்னி தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் தவால் குல்கர்னி. இந்திய அணிக்காக கடந்த 2014ஆம் ஆண்டு அறிமுகமான இவர் இதுவரை 12 ஒருநாள் மற்றும் 2 சர்வதேச டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி 22 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேற்கொண்டு ஐபிஎல் தொடரில் 92 போட்டிகளில் விளையாடியுள்ள குல்கர்னி 86 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
மேற்கொண்டு உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் மும்பை அணியின் மிக முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராகவும் தவால் குல்கர்னி செயல்பட்டு வந்தார். மேற்கொண்டு கடந்த 18 ஆண்டுகளாக உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்த தவால் குல்கர்னி கடந்த சீசன் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடருடன் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்நிலையில் தான் அவர் இளம் வீரர்களுக்கு ஆலோசனை ஒன்றினை வழங்கியுள்ளார்.
Trending
அதன்படி, இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் வீரர்கள் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து விளையாட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “ஐபிஎல் போட்டிகளைக் காட்டிலும் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவது 100 சதவிகிதம் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் நீங்கல் உள்ளூர் போட்டிகளில் விளையாடும்போது, உங்களுக்கு ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பு கிடைக்கும்.
மேற்கொண்டு இளம் வீரர்கள் இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டுமென்றால் அவர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவது மிகவும் முக்கியமானது. மும்பை கிரிக்கெட்டை பொருத்தவரையில், சர்வதேச வீரர்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் உள்ளூர் போட்டிகளிலும் விளையாடி வருகின்றனர். ஏனெனில் இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளின் தரம் அந்த அளவுக்கு சிறப்பாக உள்ளது. மேலும் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடுவதும் அவ்வளவு எளிதல்ல.
Also Read: Funding To Save Test Cricket
அதேசமயம், ஐபிஎல் தொடரும் வீரர்களுக்கு முக்கியமானது தான், ஆனால் நான் உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன். உள்நாட்டு கிரிக்கெட்டின் நிலைமைகள் பற்றிய யோசனை உங்களுக்கு கிடைக்கிறது. டெஸ்ட் விளையாட உள்நாட்டு கிரிக்கெட்டைத் தவிர வேறு வழியில்லை. மேலும் நான் அணியில் நீண்ட காலம் விளையாடியதால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது. இளம் வீரர்களுக்கு வழிவிட சரியான நேரம் வந்துவிட்டதாக நினைத்து ஓய்வு பெறுவதாக அறிவித்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now