Advertisement

டி20 உலகக்கோப்பை 2024: நேரடியாகத் தகுதி பெற்ற அணிகளின் விவரம்!

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரில் நேரடியாகத் தகுதிபெற்றுள்ள அணிகளின் விவரத்தைப் இப்பதிவில் காணலாம்.

Advertisement
12 Teams have Booked Their Qualification For the 2024 T20 World Cup!
12 Teams have Booked Their Qualification For the 2024 T20 World Cup! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Nov 07, 2022 • 04:41 PM

ஐசிசியின் ஒன்பதாவது டி20 உலகக்கோப்பை தொடர் வரும் 2024ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளன. இதுவரை 16 அணிகளுடன் நடைபெற்று வந்த இந்தப் தொடரில் அடுத்த டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் 20 அணிகள் பங்கேற்கவுள்ளன.

Bharathi Kannan
By Bharathi Kannan
November 07, 2022 • 04:41 PM

இந்நிலையில் 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடிய 8 அணிகள் அடுத்த உலகக் கோப்பைப் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. சூப்பர் 12 சுற்றில் இரு பிரிவுகளிலும் முதல் 4 இடங்களைப் பிடித்த அணிகள் அடுத்த உலகக் கோப்பை நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. 

Trending

அதன்படி குரூப் 1 பிரிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய அணிகளும் குரூப் 2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து ஆகிய அணிகளும் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. 

தகுதிச்சுற்றில் விளையாடாமலேயே நெதர்லாந்து அணி நேரடியாக தகுதி பெற்றிருப்பது முக்கியமான மாற்றமாகப் பார்க்கப்படுகிறது. போட்டியை நடத்தும் வெஸ்ட் இண்டீஸும், அமெரிக்காவும் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறுகின்றன. இந்த 10 அணிகளுடன் ஐசிசி தரவரிசையில் மேலே உள்ள வங்கதேசமும், ஆஃப்கானிஸ்தானும் நேரடியாகத் தகுதி பெறுகின்றன.

 

12 அணிகள் இதுபோல நேரடியாகத் தேர்வாகிவிட்ட நிலையில் மீதமுள்ள 8 அணிகளும் தகுதிச்சுற்றின் அடிப்படையில் தேர்வாகவுள்ளன. இந்தமுறை சூப்பர் 12 சுற்றில் விளையாடிய அயர்லாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் தகுதிச்சுற்றில் விளையாடி அதன் வழியாகவே உலகக் கோப்பை தொடரில் இடம்பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement