பயிற்சியில் அதிரடி காட்டும் சூர்யவன்ஷி; வைரலாகும் காணொளி!
எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி பயிற்சி மேற்கொள்ளும் காணொளி வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் எதிவரும் மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன.
அதிலும் இந்த முறை சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மீது கூடுதல் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. கடந்த இரு சீசன்களாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராயல்ஸ் அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. இதனால் இம்முறை கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக ராயல்ஸ் அணியும் பார்க்கப்படுகிறது. இதுதவிர்த்து சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக் உள்ளிட்டோர் அபாரமான ஃபார்மில் உள்ளனர்.
Trending
அதேசமயம் அந்த அணியின் மீது கூடுதல் கவனம் ஈர்க்கும் வகையில் 13 வயதே ஆன பிகாரைச் சேர்த்த வைபவ் சூர்யவன்ஷியை அந்த அணி நிர்வாகம் ரூ.1.10 கோடி செலவழித்து ஒப்பந்தம் செய்துள்ளது. மேற்கொண்டு யு19 உலகக்கோப்பை தொடரிலும் இந்திய அணிக்காக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக, எதிர்வரும் ஐபிஎல் தொடரில் வைபவ் சூர்யவன்ஷி மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இதற்காக அவர் தனது பயிற்சியையும் தொடங்கியுள்ளார். இந்நிலையில் அவர் தனது பயிற்சியின் போது விளையாடிய சில ஷாட்கள் குறித்த காணொளியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் அவர் பந்தை அற்புதமாக டைமிங் செய்வதுடன், இமாலய சிக்ஸர்களை விளாசும் காட்சிகளும் இடம்பிடித்துள்ளது. இந்நிலையில் வைபவ் சூர்யவன்ஷி பயிற்சி மேற்கொள்ளும் காணொளி வைரலாகி வருகிறது.
மேலும் அவரின் இந்த ஆக்ரோஷமான பேட்டிங்கின் மூலம் அனைவரையும் கவர்ந்துள்ளார். இதனால் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோரும் வைபவ் சூர்யவன்ஷி மீது அதிக கவனத்தை செலுத்தி வருகின்றனர். இதனால் அவர் இந்த ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய ஆச்சரியமான தொகுப்பாக இருக்க முடியும் என்று நம்பப்படுகிறது.
Also Read: Funding To Save Test Cricket
இருப்பினும் அவருக்கு பிளேயிங் லெவனில் இடம்கிடைக்குமா என்ற கேள்விகளும் உள்ளன. ஏனெனில் சஞ்சு சாம்சன் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என்பதால், சூர்யவன்ஷிக்கு தொடக்க வீரர் இடம் கிடைப்பது சற்றும் கடினமே. ஒருவேளை சஞ்சு சாம்சன் வழக்கம் போல் மூன்றாம் இடத்தில் விளையாடினால் சூர்யவன்ஷி தொடக்க வீரர்காக களமிறங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now