Advertisement

WI vs IND, 1st Test: அஸ்வின் அசத்தல்; யஷஸ்வி, ரோஹித் அதிரடி!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் குவித்துள்ளது.

Advertisement
1st Test: Ashwin Fifer Helps India Take Dominant Position Against West Indies
1st Test: Ashwin Fifer Helps India Take Dominant Position Against West Indies (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 13, 2023 • 11:56 AM

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்வியுடன் வரும் இந்தியாவும், முதல் முறையாக ஒரு நாள் உலகக் கோப்பை போட்டிக்கு தகுதிபெறாமல் போன ஏமாற்றத்துடன் இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று டொமினிகாவில் தொடங்கியது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
July 13, 2023 • 11:56 AM

இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் இந்திய பவுலர்கள் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விரைவாகவே வீழ்ந்தனர். குறிப்பாக அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வதில் தடுமாறினர். 

Trending

இதனால் முதல் இன்னிங்ஸில் 64.3 ஓவரில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது அந்த அணி. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அறிமுக வீரர் ஆலிக் அதானஸ் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 47 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு அவுட்டாகினர். இந்தியா சார்பில் அஸ்வின் 5 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட், சிராஜ், ஷர்துல் தாக்குர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதன்பின், முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா களமிறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்துள்ளது. ஜெய்ஸ்வால் 40 ரன்களுடனும் , ரோகித் சர்மா 30 ரன்களுடனும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement