1st Test, Day 1: அடுத்தடுத்து ஆட்டமிழந்த வங்கதேச வீரர்கள்; சாண்டோ-ரஹீம் நிதான ஆட்டம்!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது வங்க்தேச அணி 3 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்களைச் சேர்த்துள்ளது.

Sri Lanka vs Bangladesh: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் வங்கதேச அணியில் நஜ்முல் ஹொசைன் சாண்டோ-முஷ்ஃபிகூர் ரஹீம் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்தும் வரும் வங்கதேச அணி தற்சமயம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது கலே கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை அடுத்து, அணியின் தொடக்க வீரர்களாக ஷாத்மான் இஸ்லாம் மற்றும் அனாமுல் ஹக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அனமுல் ஹக் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
பின்னர் ஷாத்மானுடன் இணைந்த மொமினுல் ஹக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். இதில் ஷாத்மான் இஸ்லாம் 14 ரன்களிலும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மொமினுல் ஹக் 29 ரன்னிலும் என அடுத்தடுத்து தரிந்து ரத்நாயக்க பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் அந்த அணி 45 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய சூழ்நிலையில் ஜோடி சேர்ந்த கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ மற்றும் முஷ்ஃபிக்கூர் ரஹீம் இணை அணியை சரிவிலிருந்து மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
Also Read: LIVE Cricket Score
இதன்மூலம் வங்கதேச அணி முதல்நாள் உணவு இடைவேளையின் போது 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 90 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 25 ரன்களுடனும், முஷ்ஃபிக்கூர் ரஹீம் 20 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை அணி தரப்பில் அறிமுக வீர்ர் தரிந்து ரத்நாயக்க 2 விக்கெட்டுகளையும், அசிதா ஃபெர்னாண்டோ ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.
Win Big, Make Your Cricket Tales Now