பாக்ஸிங் டே டெஸ்ட்: இரட்டை சதமடித்த ரஹ்மத் ஷா; முன்னிலை நோக்கி நகரும் ஆஃப்கானிஸ்தான்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 425 ரன்களைக் குவித்தது.
ஜிம்பாப்வே - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிற்து. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி புலவாயோவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து முதல் இன்னிங்ஸில் 586 ரன்களைக் குவித்தது.
இதில் அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் 153 ரன்களையும், கிரேய்க் எர்வின் 104 ரன்களையும் மற்றும் பிரையன் பென்னட் 110 ரன்களையும் சேர்த்தனர். ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் அல்லா கசான்ஃபர் 3 விக்கெட்டுகளையும், நவீத் ஸத்ரான், ஜாகீர் கான் மற்றும் ஸியா உர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஃப்கான் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் தொடக்க வீரர்கள் செதிகுல்லா அடல் 3 ரன்னிலும், அப்துல் மாலிக் 23 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர்.
Trending
இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 95 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை ரஹ்மத் ஷா 49 ரன்களுடனும், ஹஸ்மதுல்லா ஷாஹிதி 16 ரன்னுடனும் இன்னிங்ஸை தொடர்ந்தனர். இதில் தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த இருவரும் தங்கள் சதங்களைப் பதிவுசெய்து அசத்தினர். இவர்கள் இருவரது பார்ட்னர்ஷிப்பையும் உடைக்க முடியாமல் ஜிம்பாப்வே அணி பந்துவீச்சாளர் தடுமாறினர். இதில் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 350 ரன்களைத் தாண்டியது.
Also Read: Funding To Save Test Cricket
இப்போட்டியில் அபாரமாக விளையாடி வரும் ரஹ்மத் ஷா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 425 ரன்களைக் குவித்துள்ளது. இதில் ரஹ்மத் ஷா 231 ரன்களையும், ஹஸ்மதுல்லா ஷாஹிதி 141 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இன்றைய ஆட்டத்தில் ஜிம்பாப்வே வீரர்களால் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்ற முடியவில்லை. இதனையடுத்து 161 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆஃப்கானிஸ்தான் அணி நாளை 4ஆம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now