நான் மூன்றாம் இடத்தில் விளையாட விரும்பினேன் - ஷுப்மன் கில்!
அணி நிர்வாகம் என்னை எங்கு பேட்டிங் செய்ய விரும்புவதாக கேட்டார்கள். நான் நம்பர் மூன்றில் விளையாட விரும்புவதாக அவர்களிடம் கூறினேன் என்று ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 வடிவிலான கிரிக்கட் தொடர்களிலும் விளையாடுகிறது. இதில் முதலில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி பார்படாஸ் டொமினிக்கா மைதானத்தில் தொடங்கியுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய தரப்பில் இஷான் கிஷான் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் அறிமுக வீரர்களாக இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி இருக்கிறார்கள். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் இடதுகை பேட்ஸ்மேன் அலிக் ஆதனஸ் அறிமுகமாகி இருக்கிறார்.
இப்போட்டியில்டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய சுழற் பந்துவீச்சாளர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரிடம் சிக்கி 150 ரண்களுக்கு சுருண்டது. ரவிச்சந்திரன் அஸ்வின் ஐந்து விக்கட்டுகளும் ரவீந்திர ஜடேஜா மூன்று விக்கட்டுகளும் கைப்பற்றினார்கள்.
Trending
இதைத்தொடர்ந்து விளையாட வந்த இந்திய அணிக்கு துவக்கம் தர கேப்டன் ரோஹித் சர்மாவுடன் அறிமுக வீரர் இடதுகை பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் வந்தார். வழக்கமாக மூன்று வடிவ இந்திய கிரிக்கெட்டிலும் தற்சமயம் துவக்க வீரராக விளையாடிக் கொண்டிருக்கும் சுப்மன் கில் இந்த முறை வரவில்லை. அவர் இந்த முறை புஜாரா விளையாடும் மூன்றாவது இடத்தில் களமிறங்குவார் என்று ஏற்கனவே இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியிருந்தார். மேலும் ஷுப்மன் கில் தாமே இதை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இடம் கேட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து பேசிய ஷுப்மன் கில், “அணி நிர்வாகம் என்னை எங்கு பேட்டிங் செய்ய விரும்புவதாக கேட்டார்கள். நான் நம்பர் மூன்றில் விளையாட விரும்புவதாக அவர்களிடம் கூறினேன். இது நான் ஒருங்கிணைக்க விரும்பும் நிலை. புதிய பந்தில் விளையாடுவது எப்பொழுதுமே நல்லது. புதிய பந்தில் விளையாடும் அனுபவம் எனக்கு இருக்கிறது.
நம்பர் மூன்றில் விளையாடுவது துவக்க இடத்தில் வந்து விளையாடுவதை விட மிகப்பெரிய வித்தியாசமாக எல்லாம் இருக்காது. நான் என்னை ஒரு சீனியர் வீரராக நினைத்து இந்த இடத்தைக் கேட்கவில்லை. ஒருமாத ஓய்வு காலத்தை நான் மிகவும் ரசித்தேன். என் குடும்பத்துடன் நான் நேரத்தை செலவழித்தேன். பார்படாஸ் மற்றும் டொமினிக்காவுக்கு இதுவே முதல் முறை. நாங்கள் இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ்க்கு வந்திருக்கிறோம். இங்கு தங்கிய நாங்கள் நல்ல முறையில் பயிற்சி பெற்றிருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now