Advertisement

NZ vs ENG, 2nd Test: மீண்டும் சீட்டுக்கட்டாய் சரிந்த நியூசிலாந்து!

இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டின் 2ஆம் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் மட்டுமே அடித்துள்ளது.

Advertisement
2nd Test: Anderson, Leach Strike As England Dominate Against New Zealand
2nd Test: Anderson, Leach Strike As England Dominate Against New Zealand (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Feb 25, 2023 • 04:40 PM

இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. முதல் டெஸ்ட்டில் 267 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என இங்கிலாந்து அணி தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், 2ஆவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
February 25, 2023 • 04:40 PM

முதலில் பேட்டிங் விளையாடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜாக் கிரௌலி (2) மற்றும் பென் டக்கெட் (9) ஆகிய இருவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். ஒல்லி போப்பும் 10 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 21 ரன்களுக்கே இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் ஹாரி ப்ரூக்கும் ஜோ ரூட்டும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி இருவருமே சதமடித்தனர். ஹாரி ப்ரூக் அடித்து விளையாடி சதமடிக்க, அவருடன் இணைந்து பொறுப்புடன் விளையாடிய ரூட்டும் சதமடித்தார்.

Trending

ப்ரூக் - ரூட் ஜோடியின் சிறப்பான பேட்டிங்கால் முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்களை குவித்திருந்தது. ஹாரி ப்ரூக் 169 பந்தில் 184 ரன்களுடனும், ரூட் 101 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 2ஆம் நாளான இன்றைய ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் 186 ரன்களுக்கு ப்ரூக் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ரூட் ஒருமுனையில் நிலைத்து நின்று ஆட, மறுமுனையில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ்(27), பென் ஃபோக்ஸ்(0), ஸ்டூவர்ட் பிராட் (14), ஒல்லி ராபின்சன் (18) ஆகியோர் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 435 ரன்களை குவித்த நிலையில்,  முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. முதல் டெஸ்ட்டில் பேட்டிங் மோசமாக ஆடியதால் தான் நியூசிலாந்து அணி படுதோல்வி அடைந்தது. முதல் முறையாக நடத்தப்பட்ட டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் கோப்பையை வென்ற நடப்பு டெஸ்ட் சாம்பியனான நியூசிலாந்து அணி, சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக படுமோசமாக விளையாடிவருகிறது.

இரண்டாவது டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி வீரர்கள் டெவான் கான்வே(0), கேன் வில்லியம்சன்(4), வில் யங்(2) ஆகியோர் படுமோசமாக  ஆட்டமிழந்தனர். கொஞ்ச நேரம் தாக்குப்பிடித்து விளையாடிய தொடக்க வீரர் டாம் லேதமும் 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஹென்ரி நிகோல்ஸ் 30 ரன்களுக்கும், டேரைல் மிட்செல் 13 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். 

அதன்பின் வந்த் மைக்கேல் பிரேஸ்வெல் 6 ரன் மட்டுமே அடித்து அவுட்டானார். 103 ரன்களுக்கே நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின் மழை நீடித்த காரணத்தால் இரண்டாம் நாள் ஆட்டம் முன்கூட்டியே முடிவடைந்தது. இதனால் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் அடித்துள்ளது. டாம் பிளண்டெல் 25 ரன்களுடனும், கேப்டன் டிம் சௌதி 23 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜேக் லீச் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement