
ZIM vs SA, 2nd Test: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வியான் முல்டரின் முற்சதம் காரணமாக முதல் இன்னிங்ஸில் 626 ரன்களை சேர்த்துள்ளது.
ஜிம்பாப்வே - தென் ஆப்பிரிக்க அணி அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புலவாயோவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் ஸோர்ஸி 10 ரன்னிலும், அறிமுக வீரர் செனொக்வானே 3 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து டேவிட் பெடிங்ஹாம் 82 ரன்களையும், லுவான் ட்ரே பிரிட்டோரிஸ் 78 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்ததுடன் சதமடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டனர்.
அதேசமயம் மறுபக்கம் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வியான் முல்டர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் முற்சத்தை விளாசினார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி இரண்டாம் நாள் உண்வு இடைவேளையின் போது முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 626 ரன்களைக் குவித்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இதில் ஆட்டமிழக்காமல் இருந்த வியான் முல்டர் 49 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் என 367 ரன்களையும், கைல் வெர்ரைன் 42 ரன்களையும் சேர்த்திருந்தனர். ஜிம்பாப்வே தரப்பில் டனகா சிவாங்கா, குண்டாய் மாடிகிமு ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.