
கான்பூர் டெஸ்டில் வங்கதேச அணிக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 35 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 47 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 27,000 ரன்களைக் கடந்த 4ஆவது வீரர் என்ற சாதனையை இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி இன்று படைத்துள்ளார். முன்னதாக இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுலர் 623 இன்னிங்ஸில் 27ஆயிரம் ரன்களைக் கடந்ததே சாதனையாக இருந்தது.
இந்நிலையில், தற்போது விராட் கோலி 594 இன்னிங்சிலேயே 27ஆயிரம் ரன்களை புதிய சாதனையைப் படைத்து சத்தியதுடன், சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் முறியடித்துள்ளார். மேற்கொண்டு சர்வதேச கிரிக்கெட்டில் 27 ஆயிரம் ரன்களைக் கடந்த இரண்டாவது இந்திய வீரர் மற்றும் சர்வதேச அளவில் நான்காவது நான்காவது வீரர் எனும் சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், இலங்கை முன்னாள் வீரர் குமார் சங்கக்காரா (28,016) மற்றும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் (27,483) ஆகியோர் மட்டுமே சர்வதேச கிரிக்கெட்டில் 27 ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர்த்து சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 9ஆயிரம் ரன்களை கடக்க விராட் கோலிக்கு மேலும் 82 ரன்கள் மட்டுமே தேவை என்பது குறிப்பிடத்தக்கது.