
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியானது 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இந்த் வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
அதன்படி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 259 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கான்வே 76 ரன்களையும், ரவீந்திரா 65 ரன்களையும் சேர்க்க, இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணி நியூசிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் முதல் இன்னிங்ஸில் 156 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் ஆட்டானது. இதில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 38 ரன்களைச் சேர்த்த நிலையில் மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். நியூசிலாந்து தரப்பில் டேரில் மிட்செல் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பின் 103 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணியில் டாம் லேதம் 86 ரன்களையும், கிளென் பிலீப்ஸ் 48 ரன்களையும் சேர்க்க, இரண்டாவது இன்னிங்ஸில் அந்த அணி 255 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதனால் இந்திய அணிக்கு 359 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.