
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
அதேசமயம் தொடரை நடத்தும் பாகிஸ்தான், வங்கதேச மற்றும் இங்கிலாந்து அணிகள் லீக் சுற்று இத்தொடரை விட்டு வெளியேறியுள்ளன. அதேசமயம் மீதமுள்ள அரையிறுதி இடங்களுக்கான போட்டியில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதிலிருந்து எந்த இரு இரண்டு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அதேசமயம் இந்திய அணி தங்களுடைய கடைசி லீக் போட்டியில் நியூசிலாந்தை எதிர்த்து விளையாடவுள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணியில் இருந்து மோசமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா காயமடைந்திருப்பதாகவும், இதனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டில் ஓய்வளிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.