IND vs AUS, 2nd T20I: மேத்யூ வேட் காட்டடி; இந்தியாவுக்கு 91 டார்கெட்!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 91 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாக்பூரில் இன்று நடைபெற்றுவருகிறது. மழைக்காரணமாக ஆட்டம் 8 ஓவர்களாக குறைக்கப்பட்டு நடைபெறுவருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தார். அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் - காமரூன் க்ரீன் இணை முதல் பந்திலிருந்தே அதிரடி காட்ட தொடங்கினர்.
Trending
இதில் க்ரீன் 5 ரன்களில் ரன் அவுட்டாகி ஆட்டமிழந்து வெளியேற, அவரைத் தொடர்ந்து வந்த கிளென் மேக்ஸ்வெல் ரன் ஏதுமின்றி முதல் பந்திலேயே ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
அவர்களைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ஆரோன் ஃபிஞ்ச் 31 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, மறுமுனையில் இருந்த டிம் டேவிட்டும் 2 ரன்களோடு ஆட்டமிழந்து நடையைக் கட்டினார்.
இதையடுத்து களமிறங்கிய மேத்யூ வேட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்சர்களை விளாசி 43 ரன்களைச் சேர்த்து அசத்தினார்.
இதன்மூலம் 8 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அக்ஸர் படேல் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
Win Big, Make Your Cricket Tales Now