ஐபிஎல் 2025: சிஎஸ்கே அணி தேர்வு செய்ய வாய்ப்புள்ள 4 இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் யார்?
இம்மாத இறுதியில் நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி தேர்வு செய்ய வாய்ப்புள்ள நான்கு இடது கை பந்துவீச்சாளர் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலம் எதிர்வரும் நவம்பர் 24ஆம் தேதி நடைபெறவுள்ளது. மொத்தம் 1574 வீரர்கள் பங்கேற்கும் இத்தொடரில் இருந்து 200 வீரர்கள் தேர்வுசெய்யப்படவுள்ளனர். இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் தாங்கள் தக்வைத்த வீரர்களின் பட்டியலையும் சமீபத்தில் வெளியிட்டன.
அந்தவகையில் ஐபிஎல் தொடரில் அதிகமுறை சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ஏலத்திற்கு முன்னதாக 5 வீரர்களைத் தக்கவைத்துள்ளது. அதன்படி அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் நட்சத்திர ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோரை தலா ரூ.18 கோடிக்கு தக்கவைத்துள்ள சிஎஸ்கே நிர்வாகம், மதீஷா பதிரானாவை ரூ,13 கோடிக்கும், ஷிவம் துபே ரூ.12 கோடிக்குக்கு தக்கவைத்துள்ளது. இதில் ஆன்கேப்ட் வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம் எஸ் தோனியை ரூ.4 கோடிக்கு தக்கவைப்பதாக சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது.
Trending
இதனால் எதிர்வரும் ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி எந்தெந்த வீரர்களைத் தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்புகளும், ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த ஏலத்தில் சிஎஸ்கே அணி நிர்வாகம் இடதுகை வேகப்பந்து வீச்சாளரைத் தேர்வு செய்வதில் ஆர்வம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த சீசனில் சிஎஸ்கேவிற்காக விளையாடிய முஸ்தஃபிசூர் ரஹ்மான் அபாரமாக செயல்பட்டிருந்தார். இந்நிலையில் அவரது இடத்தை நிரப்பும் வகையில் சிஸ்கே அணி இந்த ஏலத்தில் செயல்படும் என எதிபார்க்கப்படுகிறது. அதன்படி சிஎஸ்கே அணி தேர்வு செய்ய வாய்ப்புள்ள நான்கு இடது கை பந்துவீச்சாளர் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
1. டிரெண்ட் போல்ட்
இந்த பட்டியலில் முதலிடத்தைப் பிடிப்பவர் நியூசிலாந்தின் அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட். அவரது அனுபவம் சிஎஸ்கே அணிக்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும் பவர்பிளேயில் தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்துவதில் அவர் தனி இடத்தைப் பெற்றுள்ளார். சிஎஸ்கே அணி இதைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிரெண்ட் போல்ட் இதுவரை ஐபிஎல் தொடரில் 103 போட்டிகளில் விளையாடிய நிலையில் அதில் 121 விக்கெட்டுகளை 8.29 என்ற எகானமி ரேட் உதவியுடன் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2. கலீல் அஹ்மது
இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடிப்பவர் இந்திய வேகப்பந்து வீச்சாளர் கலீல் அஹ்மது. மேலும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்பதால் அவரை தேர்வு செய்வது சிஎஸ்கே அணி சற்று கடினமாக இருக்கலாம். ஆனாலும் சிஎஸ்கே அணிக்கு வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக தொகையை செலவு செய்யும் பட்சத்தில், நிச்சயம் கலீல் அஹ்மதை சிஎஸ்கே அணி நிர்வாகம் ஏலத்தில் எடுக்கும் வாய்ப்பும் கிடைக்கலாம். கலீல் பவர்பிளேயில் ஒரு சிறந்த பந்து வீச்சாளர் மற்றும் புதிய பந்தில் விக்கெட்டுகளை வீழ்த்துவதில் திறமையானவர். மேலும் ஐபிஎல் தொடரில் 57 போட்டிகளில் விளையாடி 74 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
3. மார்கோ ஜான்சென்
தென் ஆப்பிரிக்கா அணியின் ஆல் ரவுண்டர் மார்கோ ஜான்சனும் இந்த போட்டியில் இடம்பிடித்துள்ளார். முன்னதாக அவரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விடுவித்தது. இருப்பினும் கூட, பல அணிகள் புதிய பந்தில் அவரது அபாரமான பந்துவீச்சின் காரணமாக ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டும். மேலும் அவரால் பேட்டிங்கும் செய்ய முடியும் என்பதால் அவரை தேர்வு செய்வதற்கான போட்டியும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்கோ ஜான்சன் இதுவரை ஐபிஎல் தொடரில் 21 போட்டிகளில் விளையாடி 20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
4. ஃபசல்ஹக் ஃபரூக்கி
Also Read: Funding To Save Test Cricket
இந்த ஐபிஎல் ஏலாத்தில் சிஎஸ்கே அணி தேர்வுசெய்ய வாய்ப்பிருக்கும் வீரர்களில் ஒருவராக ஆஃப்கானிஸ்தானின் ஃபசல்ஹக் ஃபரூக்கி உள்ளார். மேலும் புதிய பந்தில் அவரால் சிறப்பாக செயல்பட முடியும், மேலும் சமீப காலங்களில் அவர் ஆஃப்கானிஸ்தான் அணிக்காகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதன் காரணமாக அவரை ஏலத்தில் எடுக்க சிஎஸ்கே அணி ஆர்வம் காட்டகூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இளம் வீரர் என்பால் அவருக்கான போட்டியும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஐபிஎல் தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now