2008 to 2025: அனைத்து ஐபிஎல் சீசன்களிலும் விளையாடிய 4 வீரர்கள்!
ஐபிஎல் தொடரின் ஆரம்ப சீசன் முதல் தற்போதைய 18ஆவது சீசன் வரைலும் விளையாடி வரும் நான்கு வீரர்கள் யார் என்பதை இப்பதிவில் பார்ப்போம்.

இந்தியன் பிரீமியர் லீக்கின் 18ஆவது சீசன் நாளை கொல்கத்தாவில் தொடங்கவுள்ளது. இந்த ஐபிஎல் சீசனில் பல புதிய முகங்கள் இடம்பெறும் அதே வேளையில், இத்தொடரின் ஆரம்பமான 2008 ஆம் ஆண்டு முதல் தற்போதுவரை தொடர்ந்து விளையாடிவரும் 4 வீரர்களின் பட்டியலைப் இப்பதிவில் பார்ப்போம்.
ரோஹித் சர்மா
Trending
ஐபிஎல் தொடரின் முதல் மூன்று சீசன்களில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடி வந்த ரோஹித் சர்மா, அதன்பின் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்து விளையாடி வருகிறார். மேற்கொண்டு அவர் தற்போது வரையிலும் அந்த அணியின் ஒரு அங்கமாக செயல்பட்டு வருகிறார். இதற்கிடையில் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியை கேப்டனாக வழிநடத்தியதுடன் 5 முறை கோப்பையையும் வென்றுள்ளார். இதுதவிர்த்து ஒரு வீரராக ரோஹித் சர்மா 6 முறை ஐபிஎல் பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலி
இந்த பட்டியலில் இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலியும் இடம்பிடித்துள்ளார். கடந்த 2008ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட அவர், தற்போது 18ஆவது சீசன் வரையிலும் அந்த அணியின் மிகமுக்கிய வீரராக செயல்பட்டு வருகிரார். இதன்மூலம் 18 சீசன்களிலும் ஒரே ஒரு அணிக்காக மட்டுமே விளையாடிய வீரர் எனும் தனித்துவ சாதனையை விராட் கோலி பெற்றுள்ளார். இதற்கிடையில் அவர் அந்த அணியின் கேப்டனாகவும் சில சீசன்கலில் செயல்பட்டதுடன். ஐபிஎல் தொடரில் அதிக ரன்களைக் குவித்த வீரராகவும் வல வருவது குறிப்பிடத்தக்கடு.
மகேந்திர சிங் தோனி
ஐபிஎல் தொடர் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனி, தொடர்ந்து 18ஆவது சீசனிலும் விளையாடுவார். 2008 ஆம் ஆண்டு தொடக்க ஐபிஎல் சீசனில் இருந்து 2015 வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி விளையாடினார். அதன்பின் சிஎஸ்கே அணி இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்ட காரணத்தால் அவர் 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸின் ஒரு பகுதியாக இருந்தார். பின்னர் 2018 இல் மீண்டும் சிஎஸ்கேவில் இணைந்த அவர் தற்போது வரையிலும் அந்த அணியின் ஒரு பகுதியாக இருந்து வருகிறார்.
மணிஷ் பாண்டே
Also Read: Funding To Save Test Cricket
இந்தப் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் மற்றொரு வீரர் மணீஷ் பாண்டே தான். அவரும் தொடர்ந்து 18ஆவது சீசனாக ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல்லில் அறிமுகமான அவர், 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காகவும், 2011 முதல் 2013 வரை புனே வாரியர்ஸ் அணிக்காகவும், 2014 முதல் 2017 வரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காகவும், 2018 முதல் 2021 வரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காகவும், 2022 இல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், 2023, 2024 இல் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் இந்த சீசனில் மீண்டும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காகவும் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now