
ஜிம்பாப்வே - இந்திய அணிகளுக்கு இடையேயான 4ஆவது டி20 போட்டியானது இன்று ஹராரேவில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் டாஸை வென்ற இந்திய அணி பந்துவீசுவதாக அறிவித்து ஜிம்பாப்வே அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி, களமிறங்கிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக சிக்கந்தர் ரஸா 46 ரன்களைச் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் கலீல் அஹ்மத் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து, 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க வீரர்கள் ஷுப்மன் கில் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்தனர். இதன்மூலம் இந்திய அணி 15.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 156 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், டி20 தொடரை 3-1 என முன்னிலையில் உள்ளது. இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 93 ரன்னும், ஷுப்மன் கில் 58 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ரஸா, “இனறைய போட்டிக்கான விக்கெட் சற்று ஈரமாக இருந்தது என்று நினைக்கிறேன். இதில் நாங்கள் 160 ரன்களைச் சேர்த்தால் வெற்றி பெறலாம் என நினைத்தோம். ஆனால் இந்திய அணி பேட்டிங் செய்த விதத்தில் 180 ரன்கள் எடுத்திருந்தால் கூட போதுமானதாக இருக்காது. ஒவ்வொரு விளையாட்டிலிருந்தும் நாங்கள் வளர்ந்து கொண்டே இருக்கிறோம்.