பாக்ஸிங் டே டெஸ்ட்: அடுத்தடுத்து அரைசதம் அடித்த பேட்டர்கள்; வலிமையான நிலையில் ஆஸி!
இந்திய அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்களைக் குவித்துள்ளது.
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையே 5 போட்டிகளை உள்ளடக்கிய பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளன. மேலும் ஒரு போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது.
இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக மெல்போர்னில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (டிசம்பர் 26) தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியை பந்துவீச அழைத்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு உஸ்மான் கவாஜா மற்றும் அறிமுக வீரர் சாம் கொன்ஸ்டாஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.
Trending
இதில் இருவரும் தொடக்கத்தில் ரன்களைச் சேர்க்க தடுமாறினாலும், அதன்பின் சாம் கொன்ஸ்டாஸ் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பந்துவீச்சாளர்களை அழுத்தத்தில் தள்ளினார். அதிலும் குறிப்பாக ஜஸ்பிரித் பும்ராவுக்கு எதிராக அடுத்தடுத்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசி ஆச்சாரியப்படுத்தினார். தொடர்ந்து அதிரடி காட்டிய சாம் கொன்ஸ்டாஸ் 52 பந்துகளில் தனது முதல் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலல் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 89 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர்.
அதன்பின், சாம் கொன்ஸ்டாஸ் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 60 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்திருந்த உஸ்மான் கவாஜாவும் 57 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த மார்னஸ் லபுஷாக்னே - ஸ்டீவ் ஸ்மித் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், மார்னஸ் லபுஷாக்னேவும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
பின் 72 ரன்களைச் சேர்த்த் நிலையில் மார்னஸ் லபுஷாக்னே விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் - அலெக்ஸ் கேரி இணையும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். இதில் ஸ்டீவ் ஸ்மித் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அலெக்ஸ் கேரி 31 ரன்களை எடுத்த கையோடு விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
Also Read: Funding To Save Test Cricket
இதனால் இப்போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்திருந்தாலும் 311 ரன்களைக் குவித்துள்ளது. இதில் ஸ்டீவ் ஸ்மித் 68 ரன்களுடனும், பாட் கம்மின்ஸ் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பாற்றியுள்ளனர்.
Win Big, Make Your Cricket Tales Now