
பார்டர் கவாஸ்கர் கோப்பையின் நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 255 ரன்களுக்கு நான்கு விக்கெட் களை இழந்திருந்தது.
அதன்பின் இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடவங்கிய ஆஸ்திரேலியா அணியில் உஸ்மான் கவாஜா மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்திய அணியினர் விக்கெட் எடுப்பதற்கே மிகவும் சிரமப்பட்டனர். உணவு இடைவேளை வரை இந்திய அணியால் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியவில்லை. மிகச் சிறப்பாக விளையாடி நேற்று சதம் அடித்த உஸ்மான் கவாஜா 150 ரன்கள் கடந்து சிறப்பாக ஆடிக் கொண்டிருந்தார். கேமரூன் கிரீன் தனது டெஸ்ட் கிரிக்கெட்டின் முதலாவது சதத்தை இன்று பதிவு செய்தார்.
ஐந்தாவது விக்கெட்க்கு ஜோடியாக உஸ்மான் கவஜா மற்றும் கிரீன் ஆகியோர் 208 ரண்களை சேர்த்தனர் . சிறப்பாக விளைடாடிக வந்த கிரீன் 114 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இதனைத் தொடர்ந்து அதே ஓவரில் அலெக்ஸ் கேரி விக்கெட்டையும் வீழ்த்தினார் அஸ்வின் . பின்னர் சில ஓவர்கள் கழித்து மிச்சல் ஸ்டார்க் விக்கெட்டும் அஸ்வின் வசம் வீழ்ந்தது. இதனால் 378 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகள் என இருந்த ஆஸ்திரேலியா 387/7 என சரிவை சந்தித்தது.