விராட் கோலிக்கான மாற்று வீரர் யார்?; கடும் போட்டியில் 5 வீரர்கள்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான முதலிரண்டு போட்டிகளிலிருந்து விராட் கோலி விலகிய நிலையில் அவருக்கு மாற்றாக எந்த வீரர் தேர்வுசெய்யப்படுவார் என்ற சந்தேகம் வலுத்துள்ளது
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இம்மாதம் முதல் தொடங்கவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 25ஆம் தேதி ஹைத்ராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக இத்தொடர் நடைபெறவுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளன.
இதையடுத்து இப்போட்டிக்கான இரு அணி வீரர்களும் நேற்றைய தினம் ஹைத்ராபாத்திற்கு சென்று தங்களது பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கெதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த நட்சத்திர வீரர் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களினால் விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
Trending
இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக விராட் கோலி பிசிசிஐயிடம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இதனால் இந்திய அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. மேலும் அவருக்கான மாற்று வீரரையும் பிசிசிஐ அறிவிக்கவில்லை.
இந்நிலையில் விராட் கோலியின் இடத்தில் யார் களமிறங்குவார் என்ற எதிபார்ப்பு அதிகரித்துள்ளது. ஏனெனில் ஏற்கெனவே ஸ்ரேயாஸ் ஐயர் நான்காம் இடத்தில் களமிறங்க தயாராகவுள்ளார். அதேசமயம் நடப்பாண்டு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சட்டேஷ்வர் புஜாரா அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி கம்பேக்கிற்காக தயாராகவுள்ளார்.
Who should replace Virat Kohli in India's Squad for the first two tests against England? #INDvENG #RajatPatidar #SarfarazKhan #RinkuSingh #AjinkyaRahane #CheteshwarPujara #ViratKohli pic.twitter.com/HooBVK1dhZ
— CRICKETNMORE (@cricketnmore) January 22, 2024
மறுபக்கம் இந்திய ஏ அணியில் விளையாடிவரும் ராஜத் பட்டிதார், சர்ஃப்ராஸ் அஹ்மத் ஆகியோர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அவர்களும் இந்த போட்டியில் உள்ளனர். மேலும் இந்திய ஏ அணிக்காக தேர்வு செய்யப்பட்ட ரிங்கு சிங் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தனது திறனை நிரூபித்துள்ளதால் அவரும் டெஸ்ட் அணிக்கு தேர்வுசெய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால் விராட் கோலிக்கு மாற்றாக யார் தேர்வுசெய்யப்படுவார் என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now