-mdl.jpg)
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் வங்கதேச அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதன்பாடி இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வென்ற நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீரர் சௌமியா சர்கார் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினாலும், மறுபக்கம் களமிறங்கிய அனமுல் 2 ரன்களிலும், நஜ்முல் ஹொசைன் 6 ரன்களிலும், லிட்டன் தாஸ் 6 ரன்களிலும், ஹிரிடோய் 12 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சௌமியா சர்கார் சதமடித்து அசத்தியதுடன் 22 பவுண்டரி, 2 சிக்சர்களை விளாசி 169 ரன்களில் ஆட்டமிழக்க, அவருக்கு துணையாக விளையாடிய முஷ்பிக்கூர் ரஹிம் 45 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, வங்கதேச அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 291 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.