Advertisement

SA20 League: மீண்டும் தோல்வியைத் தழுவியது ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்!

தென் ஆப்பிரிக்க டி20 லீக்கில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸை 7 விக்கெட் வித்தியாசத்தில் எம்ஐ கேப்டவுன் அணி அபார வெற்றி பெற்றது.

Advertisement
A convincing win for MI Cape Town against Joburg Super Kings!
A convincing win for MI Cape Town against Joburg Super Kings! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 15, 2023 • 10:35 AM

தென் ஆப்பிரிக்க டி20 லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. கேப்டவுன் நியூலாண்ட்ஸ் மைதானத்தில் இன்று நடந்த போட்டியில் எம்ஐ கேப்டவுன் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கேப்டவுன் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
January 15, 2023 • 10:35 AM

அதன்படி, முதலில் பேட்டிங் ஆடிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் கேப்டவுன் பவுலர்களிடம் மண்டியிட்டு சரணடைந்தனர். தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் சொற்ப ரன்களுக்கு அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர் சூப்பர் கிங்ஸ் வீரர்கள். அந்த அணியில் அதிகபட்சமாகவே  லியுஸ் 21 ரன்கள் தான் அடித்தார். 

Trending

அவரைத் தவிர ஜே மலான் 16 ரன்களும், கார்ட்டான் 13 ரன்களும் அடித்தனர். ஹென்ரிக்ஸ்(2), கேப்டன் டுப்ளெசிஸ்(8), கைல் வெரைன் (4) ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு வெறும் 105 ரன்கள் மட்டுமே அடித்தது. கேப்டவுன் அணியில் அபாரமாக பந்துவீசிய ரபாடா, ரஷீத் கான், லிண்டே, ஒடீன் ஸ்மித் ஆகிய நால்வரும் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 106 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய எம்.ஐ கேப்டவுன் அணியின் தொடக்க வீரர்கள் டிவால்ட் பிரெவிஸ் மற்றும் ரியான் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 8.4 ஓவரில் 65 ரன்கள் அடித்தனர். ரியான் 21 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடித்து ஆடிய டிவால்ட் பிரெவிஸ் 34 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 42 ரன்கள் அடித்தார். 

இலக்கு எளிதானது என்பதால் அதன்பின்னர் மற்றுமொரு விக்கெட் விழுந்தாலும், வாண்டர்டசனும் சாம் கரனும் இணைந்து போட்டியை முடித்துவைத்தனர். வது ஓவரில் இலக்கை அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் கேப்டவுன் அணி வெற்றி பெற்றது.

முதல் போட்டியில் டர்பன் அணிக்கு எதிராக வெற்றி பெற்ற ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி, அதன்பின்னர் பார்ல் ராயல்ஸ் மற்றும் எம்.ஐ கேப்டவுன் அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வியடைந்துள்ளது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement