
குர்பாஸுக்கு பேட்டை பரிசளித்த பாபர் ஆசாம்! (Image Source: Google)
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைப்பெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் அணிகள் சென்னையில் மோதின. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆஃப்கானிஸ்தான் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 50 ஓவர்கள் முடிவில் 282 ரன்கள் குவித்தது. இதையடுத்து 283 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஃப்கானிஸ்தான் 49 ஓவர்களில் 286 ரன் எடுத்து வெற்றி பெற்றது.