
வெஸ்ட் இண்டீஸ் அணி தற்சமயம் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் முடிவு எட்டபடாததால் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நாளை மறுநாள் கயானாவில் உள்ள புராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் ஒரு காலத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அசைக்கமுடியாத ஜாம்பவானாக திகழ்ந்து வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி கடந்த சில ஆண்டுகளாகவே டி20 கிரிக்கெட்டைத் தவிர்த்து மற்ற ஃபார்மெட்களில் சிறப்பாக செயல்பட தடுமாறி வருகிறது. அதில் குறிப்பாக அந்த அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிதளவில் சோபிக்க முடியாமல் தடுமாறி வருகிறது.
இதற்கு காரணம் அணியின் நட்சத்திர வீரர்கள் பலரும் வெஸ்ட் இண்டீஸின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளுக்காக விளையாடாமல் உலகளில் நடைபெற்றுவரும் ஃபிரான்சைஸ் டி20 லீக் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருவது தான். இந்நிலையில், வெஸ்ட் இண்டிஸை சேர்ந்த பல வீரர்களும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஆர்வம் கட்டுவதில்லை என அந்த அணி வீரர் ஆண்ட்ரே ரஸல் தெரிவித்துள்ளார்.