
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்த போதும் 49 ஓவர்களில் 10 விக்கெட்கள் இழப்பிற்கு 269 ரன்களை குவித்துவிட்டது. சேப்பாக்கம் மைதானத்தில் இது அதிகம் ஆகும்.
அந்த அணியின் தொடக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் 33, மிட்செல் மார்ஷ் 47 என சிறப்பான அடித்தளம் அமைத்தனர். இதன் பின்னர் வந்த அலெக்ஸ் கேரி 38 ரன்களும், மார்ன்ஸ் லபுசாக்னே 28 ரன்களையும் அடிக்க சவாலான ஸ்கோரை எட்ட முடிந்தது. இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி தலா 3 விக்கெட்களை கைப்பற்றினர்.
இந்நிலையில் இப்போட்டியின் போது சுவாரஸ்ய சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. ஆட்டத்தின் 43ஆவது ஓவரின் போது குல்தீப் யாதவ் பவுலிங் வீச சீன் அப்போட் ஸ்ட்ரைக்கில் இருந்தார். அப்போது திடீரென மைதானத்திற்குள் புகுந்த நாய் ஒன்று அதிவேகமாக அங்கும் இங்குமாக ஓடியது. அதனை பிடிக்க மைதான ஊழியர்கள் நீண்ட நேரமாக பின் துரத்திக்கொண்டே சென்றனர். ஆனால் அவர்களால் நாயை பிடிக்கவே முடியவில்லை.