கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் நான் சிறப்பாக செயல்படவில்லை - ரோஹித் சர்மா!
இந்த பிட்ச்சுகளில் ரிஷப் பந்த், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில் ஆகியோர் எப்படி பேட் செய்வது என்று காண்பித்தார்கள் என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது இன்றுடன் நிறைவடைந்தது. இதில் நியூசிலாந்து அணியானது மூன்று போட்டிகளிலும் வெற்றியைப் பதிவுசெய்து 3-0 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தி ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியுள்ளது.
அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வான்கடேவில் நடைபெற்ற நிலையில், இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 235 ரன்களை எடுத்தது. அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா அணியும் 263 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னார் 28 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய நியூசிலாந்து அணி 174 ரன்களைச் சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது.
Trending
இதனால் இந்தியாவுக்கு 147 ரன்கள் இலக்காக நியமிக்கப்பட்டது. அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 121 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் நியூசிலாந்து அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
இந்நிலையில் இப்போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, “ஒரு தொடரை இழப்பது, ஒரு டெஸ்டில் தோல்வியடைவது என்பது எளிதல்ல, அது எளிதில் ஜீரணிக்க முடியாத ஒன்று. மீண்டும், நாங்கள் எங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடவில்லை என்பாது எங்களுக்குத் தெரியும், அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள தான் வேண்டும். அதேசமயம் நியூசிலாந்து அணி தொடர் முழுவதும் எங்களை விட சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.
இந்த தொடரில் நாங்கள் நிறைய தவறுகளை செய்துள்ளோம், அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். முதல் இன்னிங்ஸில் நாங்கள் போதுமான ரன்களை எடுக்கவில்லை. கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் நாங்கள் விளையாட்டில் மிகவும் பின்தங்கியிருந்தோம். ஆனால், இந்த போட்டியின் நாங்கள் முதல் இன்னிங்ஸில் 30 ரன்கள் முன்னிலை பெற்றோம். அதனால் இந்த இலக்கை அடைய முடியும் என நினைத்தோன். ஆனால் நாங்கள் செய்ய வேண்டியதை செய்யத் தவறிவிட்டோம்.
அத்தகைய இலக்கைத் துரத்தும்போது, நீங்கள் ரன்களை சேர்க்க விரும்புகிறீர்கள், அது என் மனதில் இருந்த ஒன்று. ஆனால் என்னுடைய பேட்டிங்கில் அது வரவில்லை. ஒவ்வொரு முறையும் நான் பேட்டிங் செய்ய செல்லும்போது என் மனதில் சில யோசனைகள், சில திட்டங்கள் இருந்தன, ஆனால் இந்த தொடரில் அது வரவில்லை, அது எனக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. அதேசமயம் இந்த பிட்ச்சுகளில் ரிஷப் பந்த், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில் ஆகியோர் எப்படி பேட் செய்வது என்று காண்பித்தார்கள்.
Also Read: Funding To Save Test Cricket
கடந்த 3-4 வருடங்களாக இதுபோன்ற பிட்ச்களில் நாங்கள் விளையாடி வருவதைப் போன்று, இந்த போட்டியிலும் சற்று முன்னேறிச் செயல்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் இங்கு எப்படி விளையாடுவது என்பது எங்களுக்குத் தெரியும் ஆனால் இந்த பிட்சில் மிகச்சிறந்த கிரிக்கெட்டை விளையாடவில்லை. அதற்கான பலனை இப்போது அனுபவித்து வருகிறோம். கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் நான் சிறப்பாக செயல்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now