
இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் சமீபத்தில் இந்திய அணிக்காக டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அண்மையில் நடைபெற்று முடிந்த இலங்கை தொடரிலும் அவரது ஆட்டம் சிறப்பான வகையில் அமைய உடனடியாக அந்த தொடர் முடிந்ததும் அவர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடருக்கான அணியில் இணைக்கப்பட்டார்.
ஆனால் இங்கிலாந்து சென்ற அவருக்கு தற்போதுவரை வாய்ப்பு கிடைக்காமல் உள்ளது. இந்நிலையில் தற்போது இந்திய அணியில் சொதப்பலாக இருக்கும் மிடில் ஆர்டர் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் சூர்யகுமார் யாதவ்க்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக வாய்ப்பை வழங்க வேண்டும் என பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஏனெனில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தனது பக்குவமான நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சூர்யகுமார் யாதவ் டெஸ்ட் போட்டிகளிலும் நிச்சயம் பலம் சேர்ப்பார் என்பது அனைவரது கருத்தாகவும் இருக்கிறது.