சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா!
இந்திய அணியின் முன்னாள் வீரரும், பிரபல வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா, சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான அணியைத் தேர்வு செய்து அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி, வரவிருக்கும் இங்கிலாந்து ஒருநாள் தொடர் மற்றும் 2025 சாம்பியன்ஸ் கோப்பை தொடரை நோக்கி தனது கவனத்தை செலுத்தி வருகிறது. அதிலும் இங்கிலாந்து ஒருநாள் தொடர் மற்றும் சம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம்பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், பிரபல வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா, சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான அணியைத் தேர்வு செய்து அறிவித்துள்ளார். அந்தவகையில் அவர் தனது அணியில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மான் கில்லை தொடக்க வீரர்களாகத் தேர்ந்தெடுத்துள்ளார். மூன்றாவது தொடக்க வீரராக யஷஸ்வி ஜெய்ஸ்வால் தேர்ந்தெடுத்துள்ளார்.
Trending
மேற்கொண்டு விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோரை மிடில் ஆர்டரில் தேர்வு செய்துள்ளார். இருப்பினும் அவரது இந்த அணியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. இதுதவிர்த்து ஆல் ரவுண்டருக்கான இடத்தில் ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்ஸர் படேல் ஆகியோரைத் தேர்வு செய்துள்ளார்.
இதுதவிர்த்து பந்துவீச்சாளர்கள் வரிசையில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்விற்கு இடமளித்துள்ள அவர், வேகப்பந்து வீச்சாளர்களாக ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரைத் தேர்வுசெய்துள்ளார். அவரது இந்த அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் ஹர்ஷித் ரானா, முகேஷ் குமார், வருண் சக்ரவர்த்தி உள்ளிட்டோருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த இந்திய அணி: ரோஹித் சர்மா, ஷுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ரிஷப் பந்த், ஹார்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி, மற்றும் அர்ஷ்தீப் சிங்.
Win Big, Make Your Cricket Tales Now