ஐபிஎல் 2022: மும்பை அணி தக்கவைக்கும் 4 வீரர்கள் யார்?
ஐபிஎல் 15வது சீசனுக்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணி எந்த 4 வீரர்களை தக்கவைக்கும் என்று ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 14வது சீசனின் 29 லீக் போட்டிகள் நடந்துள்ள நிலையில், எஞ்சிய போட்டிகள் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் அக்டோபர் 15 வரை நடக்கவுள்ளது. இதைத்தொடர்ந்து நடைபெறும் ஐபிஎல் 15வது சீசனில் கூடுதலாக புதிதாக 2 அணிகள் சேர்க்கப்படவுள்ளன. அதனால் அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடத்தப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
மெகா ஏலம் நடக்கவிருப்பதால், அனைத்து அணிகளும் 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொண்டு மற்ற அனைத்து வீரர்களையும் கழட்டிவிட வேண்டும்.
Trending
அந்தவகையில், மும்பை இந்தியன்ஸ் அணி எந்த 4 வீரர்களை தக்கவைக்கும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல்லின் வெற்றிகரமான அணி என்ற பெருமைக்கு சொந்தமான மும்பை இந்தியன்ஸ், 2013, 2015, 2017, 2019, 2020 ஆகிய 5 சீசன்களிலும் ஐபிஎல் பட்டத்தை வென்று, அதிகமுறை ஐபிஎல் கோப்பையை வென்ற அணி என்ற சாதனைப் படைத்துள்ளது.
இந்நிலையில், ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலத்திற்கு முன்பாக, ரோஹித் சர்மா, பும்ரா, ஹர்திக் பாண்டியா ஆகிய 3 இந்திய வீரர்களுடன் வெளிநாட்டு வீரர் ஒருவராக பொல்லார்டு என மொத்தம் 4 பேரையும் மும்பை இந்திய அணி தக்கவைக்கும் என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
அதேசமயம் ஏலத்தின் போது பயன்படுத்தப்படும் ஆர்டிஎம்(Right To Match)ஐ பயன்படுத்தி குயிண்டன் டி காக்கை அணியில் சேர்க்க வாய்ப்புள்ளதாகவும் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now