Advertisement

உலகக்கோப்பை தொடரில் சஞ்சு சாம்சனுக்கு இடம் இருக்கும் - ஆகாஷ் சோப்ரா!

ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கும் ஆனாலும் அவர் விளையாடும் பிளேயிங் லெவனில் இடம்பெற வாய்ப்பு இல்லை என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan July 31, 2023 • 16:46 PM
உலகக்கோப்பை தொடரில் சஞ்சு சாம்சனுக்கு இடம் இருக்கும் - ஆகாஷ் சோப்ரா!
உலகக்கோப்பை தொடரில் சஞ்சு சாம்சனுக்கு இடம் இருக்கும் - ஆகாஷ் சோப்ரா! (Image Source: Google)
Advertisement

இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஐசிசி-யின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெறவுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டிற்கு பிறகு முற்றிலும் இந்தியாவில் இம்முறை 50 உலகக்கோப்பை நடைபெற இருப்பதினால் இம்முறை இந்திய அணி மீண்டும் கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற வேண்டும் என்பதே ரசிகர்கள் அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

இந்திய அணியும் இந்த தொடருக்காக தற்போது தங்களது அணி வீரர்களை தயார் செய்து அணியை பலப்படுத்தி வருகிறது. இன்னும் ஒரு சில வாரங்களில் உலக கோப்பை தொடருக்கான அணிகளை அறிவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கையில் இந்த உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் எந்தெந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கும்? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

Trending


அந்த வகையில் எதிர்வரும் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கும்? என்று முன்னாள் வீரர்கள் பலரும் பேசி வரும் வேளையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா இந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கும் ஆனாலும் அவர் விளையாடும் பிளேயிங் லெவனில் இடம்பெற வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “இந்திய அணியில் தற்போது உள்ள பேட்டிங் வரிசைப்படி இடது கை பேட்ஸ்மேனாக நான்காவது இடத்தில் இஷான் கிஷனை தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இடம்பெற வைத்து விளையாட வைக்க முடியும். ஏனெனில் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் ஒரு இடதுகை பேட்ஸ்மேன் வேண்டும் என்ற நிலையில் ரிஷப் பந்தின் இடத்தை அவரே பூர்த்தி செய்வார்.

இதனால் அவரை வைத்தே இந்திய அணி உலக கோப்பை தொடரில் விளையாட வாய்ப்பு உள்ளது. இந்த விடயத்தில் சஞ்சு சாம்சன் பற்றிய கேள்வி உங்கள் மனதில் இருக்கலாம். ஆனால் சஞ்சு சாம்சன் என்னை பொறுத்தவரை நான்காவது இடத்தில் விளையாட மாட்டார் என்பது வருத்தமான உண்மை.

இந்த உலகக் கோப்பை தொடரில் அவருக்கு இடம் கிடைத்தாலும் விளையாடும் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காது என்றே நினைக்கிறேன்.  அதே போன்று இந்திய அணி இந்த உலகக் கோப்பை தொடரில் டாஸ் வென்றாலும் முதலில் பேட்டிங் செய்யும் அளவிற்கு அணியின் வீரர்களை பலப்படுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement