Advertisement
Advertisement
Advertisement

வருண் சக்ரவர்த்தியை மீண்டும் அணியில் சேர்த்ததன் காரணம் என்ன? - ஆகாஷ் சோப்ரா கேள்வி!

வங்கதேச டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்து சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் வருண் சக்ரவர்த்தி அணியில் சேர்க்கப்பட்டிருப்பது குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement
வருண் சக்ரவர்த்தியை மீண்டும் அணியில் சேர்த்ததன் காரணம் என்ன? - ஆகாஷ் சோப்ரா கேள்வி!
வருண் சக்ரவர்த்தியை மீண்டும் அணியில் சேர்த்ததன் காரணம் என்ன? - ஆகாஷ் சோப்ரா கேள்வி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 11, 2024 • 01:00 PM

வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடரிலும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
October 11, 2024 • 01:00 PM

அதன்படி டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது நிதீஷ் ரெட்டி மற்றும் ரிங்கு சிங் ஆகியோரது அதிரடியான அரைசதத்தின் மூலம், 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 221 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக நிதிஷ் குமார் ரெட்டி 34 பந்தில் 74 ரன்களையும், ரிங்கு சிங் 29 பந்துகளில் 53 ரன்களையும் சேர்க்க, ஹர்திக் பாண்டியா 32 ரன்களையும் குவித்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தார்

Trending

இதனையடுத்து 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் இறுதிவரை போராடிய மஹ்முதுல்லா மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 41 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களை மட்டுமே எடுத்தது. 

இந்திய அணி சார்பில் நிதிஷ் ரெட்டி மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அர்ஷ்தீப், வாஷிங்டன் சுந்தர், அபிஷேக் சர்மா, மயங்க் யாதவ், ரியான் பராக் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தனர். இதன்மூலம் இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றிபெற்றது. மேலும் இப்போட்டியில் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் கலக்கிய நிதீஷ் ரெட்டி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில், நடப்பு வங்கதேச டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்து சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் வருண் சக்ரவர்த்தி அணியில் சேர்க்கப்பட்டிருப்பது குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “வருண் சக்கரவர்த்தி, மூன்று வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது பெரிய கேள்வியாக உள்ளது. முதல் போட்டியில் சுமாரான பந்துகளிலும் அவர் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

அது நல்லது. ஆனால் இரண்டாவது போட்டியில் முதல் போட்டியை விட அவர் நன்றாக பந்து வீசினார். முன்பை விட தற்போது அவர் தன்னம்பிக்கையுடனும் தொடர்ச்சியாகவும் அசத்தலாக பந்து வீசுகிறார். அவர் தொடர்ந்து மூன்று ஸ்டம்புகளுக்குள் பந்துவீசினார். இதுவரை வந்த அறிகுறிகள் மிகவும் நல்லது. ஆனால் தற்போது ஏன் நீங்கள் வருண் சக்கரவர்த்தி விளையாட வேண்டும்?. ஏனெனில் அடுத்த டி20 உலகக் கோப்பை இந்தியாவில் தான் நடைபெற உள்ளதன் காரணமாக தான். 

Also Read: Funding To Save Test Cricket

அப்படியானல் உங்கள் திட்டத்தில் யுஸ்வேந்திர சஹால் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் அவர் கடையாக நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இடம்பிடித்திருந்த நிலையிலும் பிளேயிங் லெவனில் வாய்ப்பு பெறாமல் இருந்தார். ஆனால் கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களிலும் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். இருப்பினும், நீங்கள் அவருக்கு வாய்ப்புகளை வழங்கவில்லை, என்பதற்கான காரணம் தான் எனக்கு தெரியவில்லை” என்று தெவித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement