
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இந்த வார இறுதியில் தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும், அந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அதிலும் குறிப்பாக தங்களுடைய முதல் சீசனிலேயே கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணி இம்முறை ஷுப்மன் கில் தலைமையில் சாதிக்குமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி மார்ச் 25ஆம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து பலபப்ரீட்சை நடத்தவுள்ளது. இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் பிளேயிங் லெவன் என்னவாக இருக்கும் என்பதை அகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது யூடியூப் பக்கத்தில் பேசுகையில், குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ஷுப்மன் கில் மற்றும் ஜோஸ் பட்லரைத் தேர்வு செய்துள்ள அவர், மூன்றாம் வரிசையில் சாய் சுதர்ஷனை தேர்ந்தெடுத்துள்ளார். அவரைத் தொடர்ந்து நான்காம் இடத்திற்கு மஹிபால் லாம்ரோரையும், 5ஆம் இடத்தில் நியூசிலாந்து ஆல் ரவுண்டர் கிளென் பிலீப்ஸுக்கு ஆகாஷ் சோப்ரா வாய்ப்பு வழங்கியுள்ளார்.