ஆகாஷ் சோப்ராவின் கனவு அணியில் இந்திய கேப்டனுக்கு இடமில்லை!
இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, 2021ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியாக தனது கனவு அணியை அறிவித்துள்ளார்
ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக விளையாடக் கூடிய வீரர்களை ஒரே அணியாக தேர்வு செய்து ஐ.சி.சி. அறிவிப்பது வழக்கம். தற்போது ஐ.சி.சி. அறிவிப்பதற்கு முன்பே இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, 2021ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியாக தனது கனவு அணியை அறிவித்துள்ளார்.
அவரது அணியின் தொடக்க வீரராக ரோஹித் சர்மாவை ஆகாஷ் தேர்வு செய்துள்ளார். ரோஹித் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடி நடப்பாண்டில் டெஸ்டில் அதிக ரன் குவித்த இந்திய வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார். மற்றொரு தொடக்க வீரராக இலங்கை அணியின் கருணரத்னே ஆகாஷ் அணியில் இடம்பிடித்துள்ளார்.
Trending
நடப்பாண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன் விளாசிய ஜோ ரூட்டுக்கு 3ஆவது இடத்தை ஆகாஷ் வழங்கியுள்ளார். கேப்டன் மற்றும் 4ஆவது வீரராக நியூசிலாந்து அணியின் வில்லியம்சனை சோப்ரா தேர்வு செய்துள்ளார். பல ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் அணிக்கு திரும்பி சதம் சதமாக விளாசிய ஃபாபத் அலாம் 5ஆவது வீரராக ஆகாஷ் அணியில் இடம்பெற்றுள்ளார்.
அதேசமயம் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இந்திய வீரர் ரிஷப் பந்துக்கும் ஆகாஷ் அணியில் இடம் கிடைத்துள்ளது
இதே போன்று சுழற்பந்துவீச்சாளராக நடப்பு ஆண்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வினையும், அக்சர் பட்டேலையும் ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார். வேகப்பந்துவீச்சாளராக நியூசிலாந்து விரர் கெயில் ஜேமிசன், இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் மற்றும் பாகிஸ்தான் வீரர் ஷாகின் ஷா அஃப்ரிடி ஆகியோரை ஆகாஷ் தமது கனவு அணியில் தேர்வு செய்துள்ளார்
ஆகாஷ் சோப்ராவின் பட்டியலில் இந்திய வீரர்கள் விராட் கோலி, பும்ரா, பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம், ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்மித், லபுசாக்னே ஆகியோர் இடம்பெறவில்லை. இதனால் அவரது ரசிகர்கள் ஆகாஷ் சோப்ராவை தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Win Big, Make Your Cricket Tales Now