ZIM vs IND, 1st T20I: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி விளையாடவுள்ள நிலையில், இப்போட்டிக்கான பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது 5 போட்டிகள் போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று ஹராரேவில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்கள் தயாராகி வருகின்றனர். அதேசமயம் ஷுப்மன் கில் தலைமையில் களமிறங்கும் இளம் இந்திய அணியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்ற தனது தேர்வை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார். அவர் தேர்வு செய்துள்ள அணியில் கேப்டன் ஷுப்மன் கில்லுடன், அனுபவ வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டை அணியில் சேர்த்துடன், அனுபவ வீரர்கள் அபிஷேக் சர்மா மற்றும் ரியான் பராக் ஆகியோருக்கும் தனது அணியில் வாய்ப்பு கொடுத்துள்ளார்.
Trending
மேற்கொண்டு அணி விக்கெட் கீப்பராக துருவ் ஜூரெலை தேர்வு செய்துள்ள அவர், ஃபினிஷராக ரிங்கு சிங்குவை தேர்வு செய்துள்ளர். மேற்கொண்டு அணியின் பந்துவீச்சாளர்களைப் பொறுத்தவரையில் சுழற்பந்து வீச்சில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவி பிஷ்னோயும், வேகப்பந்து வீச்சாளர்களாக கலீல் அஹ்மத், முகேஷ் குமார் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோரையும் தேர்வு செய்துள்ளார்.
அதேசமயம் ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ள இந்த அணியில் சாய் சுதர்ஷன், ஜித்தேஷ் சர்மா ஆகியோருடன் அறிமுக வீரர்களான துஷார் தேஷ்பாண்டே, ஹர்ஷித் ரானா ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. மேற்கொண்டு இந்த அணியில் இடம்பிடித்திருந்த சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷிவம் தூபே ஆகியோர் மூன்றாவது டி20 போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த இந்திய அணியின் பிளேயிங் லெவன்: ஷுப்மான் கில் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரியான் பராக், துருவ் ஜூரல், ரின்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், கலீல் அகமது, அவேஷ் கான், முகேஷ் குமார்.
Win Big, Make Your Cricket Tales Now