
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. அந்தவகையில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இந்த தொடரின் முதல் போட்டி வரும் 22ஆம் தேதி பெர்த் மைதானத்தில் தொடங்குகிறது.
இதற்கு தயாராகும் வகையில் இந்திய அணி வீரர்கள் பழைய பெர்த் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் இரு அணிகளாக பிரிந்து பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா குழந்தை பிறப்பின் காரணமாக பங்கேற்க மாட்டார் என்பது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது. இதனால் ஜஸ்பிரித் பும்ரா அணியை வழிநடத்தவார் என்று கூறப்படுகிறது.
அதேசமயம் பாயிற்சின் போது காயமடைந்த ஷுப்மன் கில்லும் முதல் போட்டியில் விளையாடமாட்டர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்னவாக இருக்கும், அணியின் தொடக்க வீரராக யார் களமிறங்குவார் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா தனது கணிப்பை தெரிவித்துள்ளார்.