
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் இந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதன்படி ஓவ்வொரு அணியும் தீவிரமுயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் நடப்பாண்டு ஐபிஎல் சீசனிலும் சஞ்சு சாம்சன் தலைமையில் களமிறங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் கூட பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, நூழிலையில் தங்களது வாய்ப்பை இழந்தது. இதனால் நடப்பாண்டு ஐபிஎல் தொடரி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதுடன், இரண்டாவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடனும் ராஜஸ்தான் அணி இந்த சீசனை எதிர்கொள்ளவுள்ளது. இதனால் நடப்பு சீசனில் ராஜஸ்தான் அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்ற சந்தேகங்கள் எழுந்து வருகின்றனர்.
இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். அந்தவகையில், அணியின் தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரைத் தேர்வு செய்துள்ள ஆகாஷ் சோப்ரா அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு மூன்றாம் இடத்தை வழங்கியுள்ளர். அவரைத் தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களை ரியான் பராக், துருவ் ஜுரெல், ஷிம்ரான் ஹெட்மையர் மற்றும் ரோவ்மன் பாவெலுக்கு வழங்கியுள்ளார்.