
வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்நாட்டு அணியுடன் 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடந்த 2ஆவது டி20 போட்டியில் நிக்கோலஸ் பூரனின் அதிரடியால் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்தியா அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வரும் நிலையில், ஹர்திக் பாண்ட்யாவின் தலைமை குறித்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் இந்திய அணியின் மோசமான செயல்பாடுகள் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்து உள்ளார்.
அதில் அவர், “பூரன் களத்தில் இருந்த வரை ஆட்டம் வெஸ்ட் இண்டீஸ் பக்கமே இருந்தது. ஆனால் பூரன் ஆட்டம் இழந்த பின் இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாகல் ஆட்டத்தை இந்தியா பக்கம் திருப்பினார். அவர் வீசிய 16வது ஓவரில், ரன் அவுட் உட்பட 3 விக்கெட்டுகள் விழுந்தன. இதனால் ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பியது. ஆனால் அதன்பின் கேப்டன் பாண்ட்யா சாகலை பந்து வீச அழைக்கவில்லை. அவருக்கு இன்னொரு ஓவர் மீதமிருந்தது. இது எனக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. டி20 போட்டியில் சேசிங்கில் 20ஆவது ஓவரை விட 19-வது ஓவர் முக்கியமானது.