
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16ஆவது சீசன் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் இன்று நடைபெறும் போட்டியில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகளும் மோத இருக்கின்றன . ஐபிஎல் கிரிக்கெட் தொடர்களில் சென்னை மற்றும் மும்பை காட்டுத்தபடியாக வெற்றிகரமாக அணி என்றால் அது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிதான். மும்பை அணி ஐந்து ஐபிஎல் பட்டங்களையும், சென்னை அணி 4 ஐபிஎல் பட்டங்களையும் இதுவரை வென்றுள்ளன.
இவர்களைத் தொடர்ந்து இரண்டு ஐபிஎல் பட்டங்களை வென்றிருக்கும் அணி தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் . இரண்டு சாம்பியன் பட்டங்களுமே கௌதம் கம்பீர் அணிக்கு கேப்டனாக இருந்தபோது கொல்கத்தா அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது . 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளின் போது இறுதி போட்டிகள் வரை தகுதி பெற்ற கொல்கத்தா அணி கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக செயல்படவில்லை . இந்த வருடம் ஐபிஎல் போட்டிகளுக்கு மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் களமிறங்கியது அந்த அணி .
முதல் போட்டியில் தோல்வி அடைந்தாலும் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளை மிகப் பிரம்மாண்டமான முறையில் வெற்றி பெற்று தங்களை ஒரு அபாயகரமான அணியாக முன்னிறுத்தியது கொல்கத்தா . அதன் பிறகு மும்பை அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் ஒரு தோல்வியை சந்தித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் . போட்டி துவங்குவதற்கு முன்பாகவே கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு முதுகு வலி காயம் காரணமாக அணியில் இருந்து விலக வேண்டிய சூழ்நிலை உருவானது . இந்நிலையில் புதிய கேப்டன் தலைமையில் ஆடிவரும் கொல்கத்தா அணி நன்றாகவே விளையாடி வந்தாலும் ஒரு அணியாக செயல்பட அந்த அணி தவறி கொண்டிருக்கிறது .