
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
இந்தநிலையில், இந்தியா – விண்டீஸ் இடையேயான ஒருநாள் தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா, முதல் ஒருநாள் போட்டிக்கான அவரது இந்திய அணியின் ஆடும் லெவனையும் தேர்வு செய்து அறிவித்துள்ளார்.
தனது அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவையும், ஷுப்மன் கில்லையும் தேர்வு செய்துள்ள ஆகாஷ் சோப்ரா, இஷான் கிஷனிற்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்காது என தெரிவித்துள்ளார். மிடில் ஆர்டரில் விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரை தேர்வு செய்துள்ள ஆகாஷ் சோப்ரா, விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சனையும், ஆல் ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா, ஜடேஜா மற்றும் அக்ஷர் பட்டேல் ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.